1. எனக்கு
"வயதாகிவிட்டது" என்று எப்போதும் சொல்லாதீர்கள். மூன்று வகைகளில் வயதைக்
கணக்கிடலாம். முதல் வழி உங்கள் பிறந்த தேதியை வைத்து. இரண்டாவது வழி உங்கள் உடல்
ஆரோக்கியத்தை வைத்து. மூன்றாவது வழி உங்கள் வயது எவ்வளவு என்று நீங்கள்
நினைக்கிறீர்கள் என்பது. உங்கள் பிறந்த தேதியை மாற்ற முடியாது. ஆனால் உங்கள்
ஆரோக்கியத்தை நீங்கள் நன்கு பராமரிக்க முடியும். உங்கள் மனதை இளமையாக
வைத்திருப்பதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. வாழ்க்கையை நேர்மறையாக
எதிர்கொள்ளுங்கள். எதிர்காலத்தைப்பற்றிய நல்ல கனவுகளுடன் வாழுங்கள்.