பக்கங்கள்

திங்கள், 25 பிப்ரவரி, 2013

விடா முயற்சி


விடா முயற்சி


தோல்வியை
அடையாளமிட்டு - இனி
அதற்கு கடிவாளமிட்டு;

வெறிக்கொண்டு
வெற்றிக்காக;
துவண்டத் தோள்களை
தூக்கி நிறுத்தி;

புலம்பும் வார்த்தையைப்
புடைத்துவிட்டு;
தடைகளை
விடைகளாக்கி;

அவமானத்தை
வெகுமானமாக்கி;
தோல்வியில் சுருங்கிய
உள்ளத்தைத் தூசித் தட்டி;
வெற்றிக்கு வித்திடும்
முயற்சியைத் உசுப்பி விடு!

தோல்வியை
அடையாளமிட்டு - இனி
அதற்கு கடிவாளமிட்டு;

வெறிக்கொண்டு
வெற்றிக்காக;
துவண்டத் தோள்களை
தூக்கி நிறுத்தி;

புலம்பும் வார்த்தையைப்
புடைத்துவிட்டு;
தடைகளை
விடைகளாக்கி;

அவமானத்தை
வெகுமானமாக்கி;
தோல்வியில் சுருங்கிய
உள்ளத்தைத் தூசித் தட்டி;
வெற்றிக்கு வித்திடும்
முயற்சியைத் உசுப்பி விடு!